2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

'மாற்று வழிகளை கண்டறிவோம்'

Niroshini   / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்களின் சுகாதாரத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்துவரும் நச்சுத்தன்மையுடன் கூடிய கிருமிநாசினிகள், பீடைக்கொல்லிகள் தொடர்பில் மாற்று வழிமுறைகளைக் கண்டறிவதற்கு விஞ்ஞானிகளும் தொழில்நுட்பவியலாளர்களும் உடனடிக் கவனம் செலுத்த வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கேட்டுக்கொண்டார்.

தாமரைத் தடாகம் கலையரங்கில் புதன்கிழமை (07) பிற்பகல் நடைபெற்ற 2016ஆம் ஆண்டு விஞ்ஞான தொழில்நுட்ப மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

கிருமிநாசினிகள் மற்றும் பீடைகொல்லிகளின் காரணமாக இன்று நாட்டில் அப்பாவி மக்கள் முகங்கொடுத்துள்ள சிறுநீரக நோய் ஒரு தேசம் என்ற ரீதியில் நாம் முகங்கொடுத்துள்ள ஒரு பாரிய அனர்த்தமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்நிலைமையிலிருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கு விஞ்ஞானிகளும் தொழில்நுட்பவியலாளர்களும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்புக்கள் குறித்து இதுபோன்ற மாநாடுகளில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

மேலும் தமது ஆராய்ச்சி, அறிவுத் திறன்கள், அனுபவங்களைப் பயன்படுத்தி நாட்டின் தேசிய உற்பத்தியை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, வறுமை இல்லாத ஒரு தேசத்தை கட்டியெழுப்பும் நிகழ்ச்சிதிட்டத்தில் விஞ்ஞானிகளினதும் தொழில்நுட்பவியலாளர்களினதும் பங்களிப்பானது மிக முக்கியமானதாகும் எனவும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .