Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Kogilavani / 2017 ஏப்ரல் 19 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
“இந்நாட்டில், முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற ஒட்டுமொத்தமான அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றெடுக்க, ஒத்தகருத்தோடு முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இதற்காக, மாகாணங்கள் தோறும், மக்கள் அவையங்களை உருவாக்க, அவரவர் சக்திக்கு உட்பட்டவகையில் பாடுபடுங்கள்” என, முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
"இந்நாட்டில் சிங்கள மக்களோடும் தமிழர்களோடும் மகிழ்ச்சியாக சகவாழ்வு வாழ்வதற்கு, கடந்த காலங்களில் நம் சமூகத் தலைவர்கள் சிந்தித்து செயற்பட்டதை விடவும், இக்காலத்தில் வாழ்கின்ற நாம், இன்றைய நெருக்கடி நிலைமை தொடர்பாக ஆழமாகச் சிந்தித்து, விரைவாகச் செயற்படவேண்டியுள்ளது.
மேலும் முழு நாடாளுமன்றமும், அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான சபையாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்ற இச்சூழ்நிலையில், முறையாக முகம் கொடுத்து வரலாற்றில் தடம் பதித்து, நம்மவரும் நம் பின்னவரும் சுதந்திரம் பெற வேண்டும்.
மேலும், உலகின் எந்த நாட்டில், எந்தப் போர்வையில் எவ்வாறான சக்திகள் ஊடுருவி ஊளையிட்டாலும், ஈற்றில் அது, உலக முஸ்லிம் உம்மாவுக்கு வேட்டு வைக்கும் நோக்கத்தை மாத்திரமே, அச்சக்திகள் அடிப்படையாகக் கொண்டிருப்பதனை கண்கூடாகவும், கேட்டும் அறிந்திருக்கிறோம்.
“இன்று நம் அரசியல் தலைமைகள், வெவ்வேறு தீய சக்திகளின் வலைகளுக்குள் சிக்குண்டு, வெறும் சுயநலத் தேவைகளுக்காக மாத்திரம், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இத்தலைவர்களை, முன்னைய தலைவர்களோடு ஒப்பிடுகையில், நம் சமூகம், வேதனையடையாமல் இருக்க முடியாது.
நமது சமூக உரிமைகளுக்கு வேட்டு வைக்கப்படுகின்ற இன்றைய சந்தர்ப்பங்களிளெல்லாம் நம் தலைமைகள், தட்டுத்தடுமாறிக் கொள்வதன் மூலமும், சரி செய்து கொள்வதற்கு முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவதுவும் இதனை நிரூபித்திருக்கிறது. இவர்களினுடைய இச்செயற்பாடுகள், முஸ்லிம்களை நன்றி கெட்டவர்களாகவும் இனவாதிகளாகவும் மற்றவர்களால் பார்க்கப்படுவதற்குத் துணைபோயிருக்கின்றது.
இந்நிலைமையினை எதிர்கொள்வதற்கு, இன்றைய நமது அரசியல் தலைமைகள், தலைவருக்காகக் கட்சி, கட்சிக்காக மக்கள் என்ற மறுதலைச் சூத்திரத்தைப் பாவித்து, மக்களை ஏமாற்ற முனைகின்றார்கள்.
இதனால், சமூகத்துக்காக கட்சியும், கட்சிக்காக தலைமையும் என்ற சத்தியம், தவிடுபொடியாகிக் கொண்டிருக்கிறது.
மாகாணங்கள் தோறும் அதிகாரப் பகிர்வு, சமஷ்டிக்குச் சமனான அதிகாரம் என்ற விவாதங்கள், தேர்தல் முறையில் மாற்றம், வடக்கு - கிழக்கு மக்களுக்கான தீர்வு என்பன பற்றி, சிறுபான்மைச் சமூகங்களில் ஒன்றான நம் சமூகம், அந்தந்த மாகாணங்களில் வாழ்கின்ற மக்களுக்காக மட்டுமன்றி அம்மாகாணங்களின் எதிர்கால சந்ததிகள் தொடர்பாகவும், பயபக்தியோடு ஆழமாக ஆராய்ந்து, விரைவாகச் செயற்பட வேண்டியுள்ளது. இந்த அடிப்படையின் யதார்த்தத்தை, இதயசுத்தியோடு ஏற்றுத் தொழிற்பட, நம் சமூகத்துக்கு அறைகூவல் விடுகின்றேன்.
கிழக்கு மாகாணத்தில் , 'கிழக்கு மக்கள் அவையம்' என்ற ஒரு சபை தோற்றுவிக்கப்பட்டது. இந்த அவையில், கிழக்கு மாகாணத்தின் எல்லா இவ்வமைப்பானது கட்சிகளின் சுய அபிலாஷைகளுக்கப்பால் சமூகத்துக்கு அறப்பணி செய்வதற்காக, அரசியல்வாதிகளை ஒரு நேர்கோட்டில் இட்டுச் செல்வதற்கு மட்டுமன்றி, அரசியல் தலைமைகளை மாத்திரம் பாவித்து, தீய சக்திகள் நம்மை வீழ்த்துவதற்கு எத்தனிக்கும் சதிவலைக்கு, மொத்த முகம் கொடுப்பதாகவும் அமையும்.
இதேபோன்றுதான், வடமாகாணத்து முஸ்லிம்கள் இன்று எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதற்கு, அம்மாகாணத்தில் அதிகமதிகம் புத்திஜீவிகளும் சமூகத்தலைவர்களும் கண்ணியமிக்க உலமாக்களும் ஒன்று சேர்வது அவசியமாகும்.
இவ்வாறே, ஏனைய ஏழு மாகாணங்களிலும், இதுபோன்ற சபைகள் அமைக்கப்பட வேண்டும். ஈற்றில் 09 மாகாணங்களிலுமுள்ள அச்சபைகளிலிருந்து, பிரதிநிதிகள் ஒன்றுகூடுகின்ற தேசிய ரீதியான சபையினை, தலைமைத்துவ சபை என்றோ அல்லது மசூறா சபை என்ற பெயரிலோ அமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக எல்லோரும் ஆழமாக அறிந்து கொள்ள முடியுமானதாக இருக்கும்" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago