Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Princiya Dixci / 2017 மே 05 , மு.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடளாவிய ரீதியில், உள்ள விகாரைகளில் காணப்படும் பண்டைய கால ஓலைச்சுவடிகளைப் பாதுகாப்பதற்கு, முறையான செயற்றிட்டத்தை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில், புதன்கிழமை (03) பிற்பகல் நடைபெற்றது.
இது தொடர்பாக அரசாங்கத்தினால் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்றிட்டங்கள், எதிர்காலத் திட்டங்கள், புதிய கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் உள்ளடங்கிய எழுத்து மூலமான அறிக்கையை, ஒரு வாரத்துக்குள் தனக்கு சமர்ப்பிக்குமாறு, ஜனாதிபதி, இதன்போது, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
குறித்தவொரு சமூகம் அல்லது கலாசாரத்தை பின்பற்றுபவர்களிடம் காணப்படும் அறிவுத்திறமை மற்றும் பாரம்பரிய ஞானம் என்பன அச்சமூகத்தில் காணப்படும் ஆவணங்களின் ஊடாகவே, எதிர்கால சமூகத்துக்குப் போதிக்கப்படுகின்றது.
பண்டைய இலங்கையின் பிரதான எழுத்து ஊடகமாகக் காணப்பட்ட ஓலைச்சுவடிகளிலேயே, ஆயிரக்கணக்கான வருடகாலமாக இலங்கையர்கள் தமது அனுபவங்கள் மற்றும் ஆதாரங்களின் ஊடாகப் பெற்றுக்கொண்ட பாரம்பரிய ஞானம் குவிந்து காணப்படுகிறது.
எனவே, இந்த ஆவணங்களை வரலாற்று ரீதியாக எமக்குக் கிடைத்த பெரும் சொத்தாகவே நாம் கருத வேண்டும்.
விகாரைகளில் போலவே, பாரம்பரிய சுதேச மருத்துவர்களிடம் காணப்படும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சகல ஓலைச்சுவடிகளையும் அதே இடங்களிலேயே எதிர்கால சந்ததியினரின் உபயோகத்துக்காகப் பாதுகாப்பதற்கான விரிவான செயற்றிட்டத்தின் தேவை குறித்தும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம், சுவடிகள் காப்பக திணைக்களம் மற்றும் மத்திய கலாசார நிதியம் என்பவற்றின் பிரதிநிதிகளின் கருத்துகளும், ஆலோசனைகளும் இதன்போது கருத்திற் கொள்ளப்பட்டன.
தற்போது இந்த துறையில் காணப்படும் ஆளணி பற்றாக்குறையை பூரணப்படுத்தி, அதனைப் பலப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் முறையான பாதுகாப்பு செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago