Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Princiya Dixci / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் ஐந்தாவது கட்டம், குருநாகல் மாவட்டத்தை மையப்படுத்தியதாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன், அதன் பிரதான நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் குருநாகல் மாளிகாப்பிட்டிய விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (05) பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறும்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் 'மைத்ரீ ஆட்சி - நிலையான நாடு' கொள்கைப் பிரகடனத்திற்கேற்ப போதைப்பொருள் அற்ற ஓர் இலங்கையை உருவாக்குவதன் ஊடாக சமூக, பொருளாதார மற்றும் கலாசார அபிவிருத்திக்கான பின்புலத்தை அமைப்பதே 'போதைப்பொருள் அற்ற நாடு' தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும்.
ஜனாதிபதி செயலணியினால் நடைமுறைப்படுத்தப்படும் இந்நிகழ்ச்சித்திட்டத்தினூடாக மதுபானம், புகையிலை மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் பாவனையை படிப்படியாகக் குறைத்து அதனை பாவிப்பதனால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதன் ஊடாக எல்லா இலங்கையர்களினதும் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும் வறுமையை ஒழிப்பதற்கும் நேரடிப்பங்களிப்பை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.
2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020ஆம் ஆண்டாகும் போது இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி, போக்குவரத்து மற்றும் விற்பனையை நூற்றுக்கு 80 சதவீதம் குறைப்பதுவும் 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020ஆம் ஆண்டாகும்போது தனிநபர் மதுபாவனையை நூற்றுக்கு இருப்பத்தைந்து சதவீதம் குறைப்பதுவும் 2020ஆம் ஆண்டாகும் போது புகையிலை உற்பத்தி மற்றும் பாவனையை நூற்றுக்கு 50 சதவீதமாகக் குறைப்பதுவும், புதியவர்கள் போதைப்பொருள் பாவனையை ஆரம்பிப்பதைத் தடுப்பதுவும் இதன் பிரதான இலக்குகளாகும்.
இந்நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாவது கட்டம் - கம்பஹா மாவட்டத்தை மையப்படுத்தியதாக நடைபெற்றதுடன், இரண்டாவது கட்டம் - காலி மாவட்டத்தை மையப்படுத்தியதாகவும் மூன்றாவது கட்டம் - கேகாலை மாவட்டத்தை மையப்படுத்தியதாகவும் நான்காவது கட்டம் - கொழும்பு மாவட்டத்தை மையப்படுத்தியதாகவும் நடைபெற்றன.
5ஆவது கட்டம் - குருநாகலை மாவட்டத்தை மையப்படுத்தியதாக நடைபெறுவதுடன், இத்தோடு இணைந்ததாக சட்டவிரோத போதைப்பொருள் சுற்றிவளைப்பு உள்ளிட்ட பல விசேட நிகழ்ச்சித்திட்டங்களும் கடந்த சில நாட்களில் மாவட்டம் எங்கிலும் நடைமுறைப்படுத்தப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
23 minute ago
34 minute ago
44 minute ago