2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

‘புத்தாக்கத்தை புலமைச்சொத்து ஊக்குவிக்கின்றது’

Kogilavani   / 2017 ஏப்ரல் 26 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

“புலமைச்சொத்து உரிமைகளானது கண்டுபிடிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் ஆக்கப்பூர்வ முயற்சிகளுக்கு விருந்தாக இருக்கின்றது. அது ஆய்வு மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவிக்கின்றது” ​என கொழுப்பில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பொருளியல் பிரிவின் பிரதானி பார்த்தா மஷீம்டர் தெரிவித்தார்

இலங்கை மக்களுக்கு புத்தாக்கம் மற்றும் புலமைச் சொத்து பாதுகாப்பின் பொருளாதார பயன்களை சுட்டிக்காட்டும் நிகழ்வு இன்று (26) கொழும்பில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சில சந்தர்ப்பங்களில் புலமைச்சொத்து பாதுகாப்பானது  வாழ்க்கையை காப்பாற்றுவதற்கான புதிய படைப்புகளின் கண்டுபிடித்தலையும் தூண்டுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், “பல்கலைக்கழக வர்த்தகத் தொடர்புகளை விருத்தி செய்யும் செயற்பாட்டில் நாம் தற்போது ஈடுபட்டுள்ளோம். எனவே, பொருளாதார அபிவிருத்திக்கு இந்த அறிவினை பயன்படுத்துவது மிகவும் முக்கியமாகும்” என, யாழ். பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஏ.அற்புதராஜா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .