2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

'பெண்களின் முறைப்பாடின்றி சட்ட நடவடிக்கை இல்லை'

Princiya Dixci   / 2016 மார்ச் 30 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பாநூ கார்த்திகேசு

'வீட்டில் உள்ளவர்களால் மேற்கொள்ளப்படும் வன்முறைகளைக் கண்டித்து குறித்த வீட்டில் உள்ள பெண்களால் வழங்கப்படும் முறைப்பாடு இன்றி சட்ட நடவடிக்கை முடியாது. 

'ஆனால், வேலைத்தளங்கள் மற்றும் பொது இடங்களில் பெண்கள் தகாத வார்த்தைப் பிரயோகங்களாலோ அல்லது செயல்களாகளோ துஷ்பிரயோகத்துக்கு  உட்படுத்தப்படும் பட்சத்தில் அவற்றுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். 

'அவ்வாறான நடவடிக்கையை  மகளிர் விவகார அமைச்சு மேற்கொள்கின்றது' என மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்தார்.

தேசியப் பெண்கள் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட மகளிர் வைபவம், தேசிய மீனவப் பெண்கள் சம்மேளனம் மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டின் கீழ் கொழும்பு - 07 இல் அமைந்துள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (29) நடைபெற்றது.

இந்நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

சிறுவர் மற்றும் முதியோர் தினத்தயொட்டி சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வீட்டு வன்முறைகளைக் கண்டித்து 13 மாவட்டங்களில் கடந்த ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி மேற்கொள்ளப்பட்ட கையெழுத்து வேட்டை அடங்கிய கடிதத்தை, மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டாரவிடம் தேசிய மீனவப் பெண்கள் சம்மேளனத்தின் இணைத்தலைவிகளான வடிவேலம்மா மற்றும் எம்.எம்.மாலனி ஆகியோர் இந்நிகழ்வில் கையளித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .