Kogilavani / 2017 மார்ச் 26 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
“புத்தளம் பகுதியில் இரவு நேரங்களில், பொலிஸ் ரோந்து சேவைகளை மேற்கொண்டு வருகிறோம். இதனால், இரவு நேரங்களில் தேவையின்றி, வீதியோரங்களில் சுற்றித்திரிவதையும் கடைத்தெருக்களில் கூட்டம் கூட்டமாக அமர்ந்திருப்பதையும், இளைஞர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்” என, புத்தளம் பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் அநுர குணவர்தன தெரிவித்தார்.
புத்தளத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“முல்லை ஸ்கீம் கிராமத்தின் பாதுகாப்பு தொடர்பில் நாம் விசேட கவனம் செலுத்தவுள்ளோம். முல்லை ஸ்கீம் கிராமத்தில் உள்ளவர்களின் பெயர் விவரங்களை எமக்குத் தாருங்கள். இவர்களில் யார் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள், யார் பதிவு செய்யாது குடியிருக்கிறார்கள் போன்ற விவரங்களை நாம் சேகரித்து, மேலதிக விசாரணைகளை மேற்கொள்கிறோம்” என்றும் தெரிவித்தார்.
2 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025