2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

‘தேர்தலை நடத்துங்கள்’

Kogilavani   / 2017 பெப்ரவரி 20 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நாட்டின் சுத்தம், சுகாதாரம் உட்பட பல்வேறு அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகாத நிலையில், டெங்கு நோயின் தாக்கம் பரவலாக வியாபித்து வருகின்றது. அது மட்டுமல்லாது, பல்வேறு நோய்கள் பரவுகின்ற அபாயமும் தோன்றியுள்ளது. இதனை முடிவுக்குக் கொண்டுவர​ வேண்டுமாயின், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை உடன் நடத்த வேண்டும்” என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

“நாடளாவிய ரீதியில் தற்போது மக்கள் பிரதிநிதிகளின்றி செயற்படுகின்ற உள்ளூராட்சி சபைகள் பலவற்றில், மக்கள் நலன்சார்ந்த பணிகளின் வினைத்திறன்கள் செயலற்றுப்  போயுள்ளன. இந்நிலையில், வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களிலும், டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்கள், பாரியளவில் பெருகியுள்ளன. இனந்தெரியாத வைரஸ்களால் ஏற்படுகின்ற நோய்களைக் கூட, தற்போது அதிகளவில் தென்பகுதிக் கிராமங்களில் காணக்கூடியதாக உள்ளது. 

எனவே, தற்போதைய உடனடித் தேவையாக இருப்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை உடன் நடத்துவதாகும். அது புதிய தேர்தல் முறைக்கு அமைவாக நடத்த காலதாமதமாகுமெனில், பழைய முறையில் நடத்தலாம், அல்லது தேர்தல் நடத்தப்படும் வரை சில காலத்துக்கு முன்னைய நிர்வாகிகளிடம் உள்ளூராட்சி மன்றங்களை, ஒரு தற்காலிக ஏற்பாடாக ஒப்படைக்கலாம்.

எனவே, இதில் ஒரு முறையை கையாண்டு, இந்த அரசாங்கம் உடனடியாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு முன்வர வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .