2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

‘சிறிய இதயத்துக்கு சுகம் தாருங்கள்’

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 09 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வரதராஜன் யுகந்தினி

இதய நோயுள்ள பிள்ளைகள் மற்றும் தீவிர சிகிச்சை பெறும் பிள்ளைகளின் நாளைய தினத்துக்காக நிதி சேகரிக்கும் வகையிலான பாதயாத்திரை நிகழ்வொன்று, எதிர்வரும் 14ஆம் திகதியன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தகவல் தெரிவித்த சிறுவர் இதயநோய் வைத்திய நிபுணர் துமிந்த சமரசிங்க கூறியதாவது,

“எமது நாட்டில் இதய நோய் மற்றும் வேறு நோய்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களில் 1000 – 1500க்கு மேற்பட்டோர், வருடந்தோறும் சிகிச்சைப் பெறமுடியாத நிலையில் இருக்கன்றனர்.

இதய நோய் தொடர்பான எல்லா விதமான சிகிச்சைகளையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில், சத்திர சிகிச்சை நிலையமொன்றினை அமைப்பதற்கான நிதி, எங்களிடம் போதுமானதாக இல்லை.

ஆதலால், “சிறிய இதயத்துக்கு சுகம் தாருங்கள்” என்ற தொனிப்பொருளின் கீழ், குறித்த நிதி சேகரிக்கும் பாதயாத்திரையினை ஏற்பாடு செய்துள்ளோம்.

இதன் வாயிலாக சேகரிக்கப்படும் நிதியினைக் கொண்டு, தேசிய குழந்தைகள் மருத்துவமனைக்கான 10 மாடிகளைக்கொண்ட நிரந்தர கட்டடம் ஒன்றினை அமைப்பதற்குத் தீர்மானித்துள்ளோம்.

இந்தப் பாதயாத்திரை, எதிர்வரும் 14ஆம் திகதியன்று காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணிவரை நடத்தப்படவுள்ளது. இதில்ஈ ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் பங்கேற்க இருப்பதோடு, அவர்களூடாக, நிதி சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .