2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

'சீ-நோர்'ஐ மீது அவதானம்

Kogilavani   / 2017 பெப்ரவரி 20 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீ-நோர் உணவகத்தை, இலாபகரமானஅரச அமைப்பாக உருவாக்குவதற்குத் தேவையான முன்மொழிவுகளையும் செயற்றிட்டங்களையும் கொண்டுவருமாறு, கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர, அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள இந்த உணவகத்தின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டமொன்று, அமைச்சர் தலைமையில் ஞாயிறன்று இடம்பெற்ற போதே, இந்தப் பணிப்புரையை அவர் விடுத்துள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளில், முகாமைத்துவக் குறைபாடுகள் காரணமாக, சீ-நோர் உணவகம், கணிசமானளவு இலாபத்தை இழந்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

சீ-நோர் களஞ்சியத் தொகுதியும் மட்டக்குளியில் அமைந்துள்ள படகுத் தொகுதியும், தனியார் நிறுவனமொன்றுக்கு, மிகவும் குறைந்த வாடகையாக 100,000 ரூபாய்க்கும் குறைவான தொகையில் வழங்கப்பட்டது. இதன் காரணமாக, பாரியளவு நட்டம் ஏற்பட்ட நிலையில், 1 மில்லியன் ரூபாயைச் செலுத்த முன்வந்த இன்னுமொரு நிறுவனத்துக்கு, அவை வழங்கப்பட்டன. இதனால், மிகப்பெரிய வருடாந்த இலாபம் கிடைக்கப்பெற்றது. அதிகாரிகளின் தகவலின்படி, கடந்த 5 ஆண்டுகளில், சீ-நோரால் சந்திக்கப்பட்ட இழப்பு, ஏறத்தாழ 60 மில்லியன் ரூபாய் என அறிவிக்கப்படுகிறது.

சீ-நோர் உணவகம், தனியார் நிறுவனமொன்றுக்கு மாதாந்தம் 150,000 (ஒன்றரை இலட்சம்) ரூபாய்க்கு, 5 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது இன்னுமொரு நிறுவனம், இந்த உணவகத்துக்காக மாதாந்தம் 1.6 மில்லியன் ரூபாயைச் செலுத்தத் தயாராக இருப்பதாக, அமைச்சருக்கு உயரதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .