2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

கிராமப் புற பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய வேண்டும்

Kogilavani   / 2016 ஜனவரி 21 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெம்சாத் இக்பால்

'நகரப் புற பாடசாலைகளில் காணப்படுகின்ற அடிப்படை வசதிகளைப் போன்று கிராமப் புற பாடசாலைகளையும் சரிசமமாக முன்னேற்றுவது நமது அரசாங்கத்தின் கடமையாகும்' என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாமிடத்தைப் பெற்ற ஜே.எம்.தசுன் ஓசித ஜயசிங்கவை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொறியலாளர் சங்கத்தினால்  நடத்தப்பட்டது.

நகர திட்டமில் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் கேட்போர் செவ்வாய்க்கிழமை (19) நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதம அதிதிகாய கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனை கூறினார்.

இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

'தற்போதைய கல்வி முறைமையை, முன்னைய கல்வி முறைமையோடு ஒப்பிட முடியாது. சிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன் புதுமையான, நுட்பமான, பல தரப்பட்ட அறிவாற்றல்களை மாணவர்களுக்கு வழங்கும் கல்வி அமைச்சின் புதிய பாடத்திட்டங்களை வரவேற்கின்றேன்.

திறமையும் ஆற்றலும் நிறைந்த மாணவர்கள் பின்தங்கிய பாடசாலைகளில் இலைமறை காயாக உள்ளனர். அவர்களின் திறமைகளையும் ஆற்றல்களையும் போட்டிப் பரீட்சைகள் மூலமாகவும் பொதுப்பரீட்சைகளின் வாயிலாகவும் வெளிக்கொண்டு வருவது நமது கடமையாகும்' என்றார்.

இதன்போது, நீர் வழங்கல் அதிகார சபையினால் நாடளாவிய ரீதியில் பிரதேசவாரியாக நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெற்றவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சுதர்சணி பெர்னாண்டோபுள்ள, அமைச்சின் செயலாளர், மேலதிகச் செயலாளர்கள், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர், பொது முகாமையாளர், பொறியலாளர்கள், அதிகாரிகள்  உட்பட ஊழியர்களும் பங்குபற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .