Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Princiya Dixci / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்நாட்டு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி, ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக வேறெந்த அரசினாலும் ஒதுக்கப்படாத பாரியளவு நிதியினை சென்ற வரவு - செலவுத்திட்டத்தில் தற்போதைய அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இதன்மூலம் அதிகபட்ச பயனை அடைந்து நாட்டின் எதிர்கால அபிவிருத்தி இலக்கை வெற்றிகொள்வதற்கு பங்களிக்குமாறு கல்விமான்களுக்கு அழைப்புவிடுத்தார்.
கொழும்பு ஹில்டன் ரெஷிடென்சி ஹோட்டலில் இடம்பெற்ற களனிப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் 25ஆவது ஆண்டு பூர்த்தி நிகழ்வில் புதன்கிழமை (06) பிற்பகல் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு அழைப்பை விடுத்தார்.
மருத்துவ விஞ்ஞான ஆராய்ச்சிகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட அறிவினை சாதாரண பொது மக்களின் நன்மைக்காக பயன்படுத்துதல் வேண்டுமென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இலவசக் கல்வியை பெற்று உருவாகி நாட்டை விட்டுச்சென்று உலகத்தை குணப்படுத்துவதற்காக புறப்பட முன்னர் பிறந்த நாட்டில் வாழும் மனிதர்களுக்காக ஆற்றப்பட வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஒன்றுபடுமாறு அனைவரையும் தான் கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.
இன்று எமது மருத்துவத்துறை பெற்றுக்கொண்டுள்ள முன்னேற்றம்பற்றி மகிழ்ச்சி தெரிவித்த ஜனாதிபதி, எமது நாட்டு வைத்தியர்கள் எந்தவொரு நாட்டினதும் வைத்தியர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல எனவும் தனது தொழில்சார் திறமைகளின் மூலம் உலகினை வென்று முன்னேறிச் செல்வதற்குத் தேவையான சகல வசதிகளையும் அவர்களுக்கு வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago
31 minute ago
31 minute ago