2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

138ஆவது வருட வேர்விலை புனித பஹாரி வைபவம்

Kogilavani   / 2017 ஏப்ரல் 26 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அத்தாஸ்

இலங்கையில் 1301ம் ஆண்டு ஆரம்பம் செய்து நடாத்தப்பட்ட புனித பஹாரிக்கிரந்தப் பாராயண மஜ்ஸில், இம்முறை 138ஆவது வருட வைபவமாக கொண்டாடப்படுகின்றது.

கடந்த 2017 ஏப்ரல் 25இல் ஸபஹ் தொழுகையின் பின் புனித புஹாரி வைபவம் ஆ​ரம்பிக்கப்பட்டது.

30 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இவ்வைபவம் வௌ்ளிக் கிழமைநாட்களில் நடைபெறாது.

இந்நிகழ்வுகளில் பெண்கள் பங்கு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. இம்முறை பெரிய கந்தூரி பூர்த்தி வைபவம் நாளை பகல் இடம்பெறும்

சமூகமளிக்கும் இலட்சக்கணக்காண முஸ்லிம் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது.

இலங்கையில் முதல் முதலில் வேர்விலையில் நடைபெறத் தொடங்கிய இப்புனித வைபவத்தை அடி ஒட்டியே இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் இப்புனித வைபவம் தோற்றுவிக்கப்பட்டு நடத்தப்படுகிறது.

காதிரிய்யதுந் நபவிய்யா தீர்க்காவைக் கொண்டு ஏமன் தேசத்திலிருந்து இலங்கைக்கு வருகை தந்து, இஸ்லாத்தைப் பரப்பிய அஷ்ஷெய்ஹ் முபாரக் மௌலானா நாயகம் அவர்களை துயர்ந்து நின்ற, அஷ்ஷெய்க் முஸ்தபா இப்னு பாவா ஆதிம் அவர்களால் 1301ம் ஆண்டு குறித்த வைபவம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

முஸ்லிம்களின் தூய அல்குர் ஆனுக்கு அடுத்த ஸ்தானத்தில் வைத்துப் பேணப்படும் கிரந்ததமே புனித பஹாரிக் கிரந்தமாகும்

இஸ்லாத்துக்கு புத்துயிரூட்டும் நிகழ்வாகவே, குறித்த வைபவம் நடத்தப்படுகின்றது.

இந்த வைபவத்தின் நிறைவுநாள் நாளை ​பகல் இடம்பெறும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .