2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

'அரசாங்கத்துக்கு அக்கறையில்லை'

Niroshini   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த அரசாங்கத்தின் ஊழல்களை கண்டுபிடிப்பதில் செலுத்தும் அக்கறையை இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அநீதியை விசாரணை செய்வதற்கோ அல்லது இன்று பூதகரமாக எழுந்து வந்திருக்கும் இவ்விடயங்களை விசாரணை செய்வதிலோ இவ் அரசாங்கத்துக்கு அக்கறையில்லை” என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் எஸ்.ஸ்ரீ நிமல் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

“இன்றைய நல்லாட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கும் அரசாங்கத்தின் ஒவ்வொரு அமைச்சர்களும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். இராணுவத்தைக் காப்பாற்றுவதன் மூலம் சிங்கள, பௌத்த வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஒரு சில அமைச்சர்கள் இவ்விடயத்தில் தலையிட்டு குழப்பி வருகின்றனர். அதே நேரத்தில், வழமை போல் இன்றைய அரசாங்கம் இப்படி நடக்குமேயானால் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று சொல்லி வருகின்றது.

எப்பொழுதுமே இவ் அரசாங்கம், நியாயமான விசாரணைகள் நடத்தப்படும் என்ற வாக்குறுதியை வழங்குகின்றதேயொழிய நடைமுறையில் எதனையும் செய்வதில்லை.  

முன்னாள் போராளிகள் விடயத்தில் இன்று பலதரப்பட்ட சந்தேகங்கள் வலுப்பெற்று வருகின்றன. அவர்களுக்கு புனர்வாழ்வழிக்கப்பட்ட பொழுது நீதிக்கு புறம்பான விடயங்கள் இடம்பெற்றதாக தகவல்கள் கசிந்துள்ளன. இப்படியான தகவல்கள் உண்மையாக இருக்குமேயானால் இது பாரிய மனித உரிமை மீறல் ஆகும்.

போராளிகளின் இவ்விடயத்துக்கு விரைவில் விசாரணை நடத்தி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு எதிராக தமிழ் மக்கள் வெகுண்டு எழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இவ்விடயத்தில் அறிக்கைகள் மட்டும் வெளியிட்டுக் கொண்டிராமல், தாங்கள் உருவாக்கிய இந்த அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மாறாக பாலுக்கு காவலாகவும் பூனைக்கு தோழனாக செயல்படக்கூடாது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .