Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Princiya Dixci / 2017 ஜனவரி 24 , மு.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
“நாட்டின் அனைத்துப் பிள்ளைகளுக்கும் இலவசக் கல்வியை உறுதிசெய்து, கல்வி கற்ற பரம்பரையைக் கொண்ட சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொழும்பு விசாகா வித்தியாலயத்தில் நேற்று (23) நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
வித்தியாலயத்துக்குச் சென்ற ஜனாதிபதியை மாணவிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இந்த விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி, விசாகா கல்லூரியின் நூறு வருட சிறந்த பயணத்தையும் பாராட்டினார்.
புதிய தொழில்நுட்பம், வர்த்தகமயமாதல், போட்டித்தன்மை போன்ற அம்சங்கள் பல்வேறு சவால்களை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில், எமது கலாசாரத்தைப் பாதுகாத்து முன்னேறிச் செல்வதற்கு எமது பிள்ளைகள் தயாராக இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
1917ஆம் ஆண்டு ஜெரமியஸ் டயஸ் அம்மையாரினால் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு விசாகா வித்தியாலயம் இலங்கையில் உள்ள பழைமை வாய்ந்த பௌத்த மகளிர் கல்லூரியாகும்.
கல்லூரியின் நூற்றாண்டை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு நாணயத்தை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, ஜனாதிபதியிடம் கையளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
35 minute ago
40 minute ago
3 hours ago