Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Niroshini / 2016 மார்ச் 26 , மு.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் மக்களை அணுகும் எந்த ஒரு கட்சியும் அதிகாரப்பகிர்வு என்ற விடயம் பற்றிய தனது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை அறிவிக்கவேண்டும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும்இ ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய அமைப்புகளின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஜனநாயக இளைஞர் இணைய கருத்தரங்கில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது,
'அடிப்படை உரிமைகளை வழங்குவதன் மூலமே தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்ப முடியும்' என ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். தமிழர்களை நோக்கி ஜே.வி.பி இன்று நகர்வுகளை மேற்கொள்வதையும் இரு கரம் கூப்பி வரவேற்கிறேன். ஆனால், தமிழ் மக்களை பொறுத்தவரையில், அடிப்படை உரிமை வரிசை பட்டியலில் அதிகாரப்பகிர்வு என்பதுவே எப்போதும் முதலிடத்தில் இருந்து வருகிறது.
இதற்காகத்தான் தமிழர்கள் சொல்லொணா துன்பங்களை சந்தித்து சளைக்காமல் கடந்த 68 வருட கால சுதந்திர இலங்கையில் பல்வேறு விதமாக போராடி வருகிறார்கள்.
பிறக்கும் குழந்தைகள் இன, மத வேறுபாடுகளுடன் பிறப்பதில்லை என்ற கருத்து உயரியது. ஆனால், இத்தகைய கருத்துகளை ஜே.ஆர் முதல் ராஜபக்ஷ வரை சொல்லக்கேட்டு கைதட்டி, கைதட்டி தமிழ் சமூகம் சலித்து போயுள்ளது.
நண்பர் அனுரவும் இதை சொல்லும் போது தமிழர்கள் மீண்டும் ஒருமுறை கைத்தட்டுவார்கள். முஸ்லிம்களும் கூடவே கை தட்டுவார்கள். ஆனால் அதற்கு மேல் ஒன்றும் நடக்காது. நடக்க வேண்டும் என்றால் ஒரே நாடு என்ற வரையறைக்குள் அதிகாரப்பகிர்வு என்ற புதிய அத்தியாயத்தை ஜே.வி.பி திறக்க வேண்டும்.
இன மோதல்களுக்கு இனி ஜே.வி.பி ஒருபோதும் இடந்தராது என்ற நண்பரின் உறுதிமொழியையும் நான் மதித்து வரவேற்கிறேன். ஆனால், சமகாலத்தில் நடைபெற்ற பாரிய யுத்தத்துக்கும் அதற்கு வழிகோலிய அதிகாரங்களை பகிர்ந்து தரமறுக்கும் பிடிவாத இனவாதத்துக்கும் ஜே.வி.பியின் மருந்து என்ன என்பது பற்றி ஜே.வி.பியிடம் தெளிவான நிலைப்பாடுகளை நாம் காணவில்லை. இன்னமும் சொல்லப்போனால் குழப்பமான நிலைப்பாடுகளையே நாம் காண்கிறோம்.
எனவே நாம் என்ன செய்வது? குழப்பத்தை தீர்த்து விடு நண்பா அனுரா என்று உரக்க கத்த வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. எனது இந்த உரையை அப்படியே சிங்கள மொழியில் மொழிபெயர்த்து நண்பர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பி வைக்கும்படி ஜனநாயக இளைஞர் இணைய செயலாளருக்கு கூறுகிறேன் எள்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
34 minute ago
34 minute ago