Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Janu / 2024 ஏப்ரல் 01 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேராதனைப் பல்கலைக்கழக கலைப் பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் பேராதனை, பெனிதெனிய பிரதேசத்தில் வைத்து ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தில் , சட்டக் கல்வி கற்கும் வாத்துவ பிரதேசத்தை சேர்ந்த சித்சரத சில்வா என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
குறித்த மாணவன் ,ஹேண்ட்ஸ் ஃப்ரீயை (hand free ) தனது காதில் அணிந்துக்கொண்டு ரயில் பாதையில் நடந்துக்கொண்டிருக்கும்போது நாவலப்பிட்டி - கண்டி ரயிலில் மோதியே இவ்விபத்து ஏற்ப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
மேலும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago