2025 பெப்ரவரி 15, சனிக்கிழமை

ஹட்டனில் காவலாளியை கொன்றுவிட்டு: உண்டியல் திருட்டு

Editorial   / 2023 டிசெம்பர் 10 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளியின் தலையில் அடித்துக் கொன்று விட்டு, பள்ளிவாசலில் இருந்து உண்டியலில் இருந்த பணம் எடுக்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் சுமார் இரண்டு வருடங்களாக காவலாளியாக கடமையாற்றிய ஹட்டன் ஹிஜிரபுர பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான எம்.இப்றாஹிம் (வயது 67) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஒருவர் ஜும்மா பள்ளிவாசலின் சுவரில் இருந்து குதித்து காவலாளி தங்கியிருக்கும் அறைக்கு சென்று விட்டு வெளியே வந்து பள்ளிவாசலில் இருந்த உண்டியலை உடைத்து பணத்தை எடுத்துச் சென்றுள்ளதாக ஹட்டன் ஜும்மா பள்ளிவாசல் போதகர் ஏ.ஜே.எம்.ஃபாமிஸ் தெரிவித்தார். .

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் உண்டியல் பல தடவைகள் உடைக்கப்பட்டு, பணம் எடுத்துச் செல்லப்பட்டது. அதன் பின்னர் பள்ளிவாசல் பாதுகாப்பிற்காக காவலாளி நியமிக்கப்பட்டதாக பள்ளிவாசல் பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.

ரஞ்சித் ராஜபக்ஷ


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X