2025 ஜனவரி 08, புதன்கிழமை

ஹட்டன் விபத்து : நிபந்தனை பிணையில் சாரதி விடுதலை

Editorial   / 2025 ஜனவரி 07 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன் தனியார் பேரூந்து விபத்தின் சாரதியை கடுமையான  நிபந்தனை பிணையில் விடுவிக்குமாறும், இந்த வழக்கை 05.06.2025 அன்று மீண்டும் அழைக்குமாறும் ஹட்டன் மாவட்ட நீதிபதியும் நீதவானுமான  எம்.பரூக்தீன், செவ்வாய்க்கிழமை (07) உத்தரவிட்டார்.

நாவலப்பிட்டி நவதிஸ்பனே பகுதியைச் சேர்ந்த ரம்போடகெதர பிரசன்ன பண்டார (வயது 46) என்பவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் செவ்வாய்க்கிழமை (07) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, ​​நீதவான் சந்தேக நபரை இரண்டு சரீரப் பிணைகளில் விடுவித்தார்.

சந்தேகநபரான சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், பேருந்தின் உரிமையாளரான கண்டியைச் சேர்ந்த விஜேரத்ன  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, இரண்டு ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை, ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் கைச்சாத்திடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X