2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

ஸ்ரீபாலிக்கு கொட்டகலயில் காணி

Editorial   / 2025 ஜனவரி 28 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஸ்ரீபாலி வளாகத்தில் 850 வரையான மாணவர்கள் கல்வி கற்பதுடன், மாணவர்கள் விளையாடுதல் மற்றும் விளையாட்டு விழாக்களை நடத்துவதற்காக பொருத்தமான விளையாட்டு மைதானம் இன்மை பாரிய குறைபாடாக இருக்கிறது.

எனவே, ஸ்ரீபாலி வளாகத்துக்கு அருகிலுள்ள கொட்டகல பெருந்தோட்ட கம்பனியின் கீழுள்ள ஹொரண பெருந்தோட்டத்துக்கு உரியதான, தற்போது எந்தவொரு பயிர்ச்செய்கையும் மேற்கொள்ளப்படாத 2.5 ஏக்கர் காணித் துண்டை பொது மைதானத்துக்காக பாவிக்கக்கூடிய வகையில் ஒதுக்குவதற்காக தொடர்புடைய தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேற்குறித்த காணித்துண்டை இழப்பீடு இன்றி விடுவிப்பதற்கு கொட்டகல பெருந்தோட்ட கம்பனியின் பணிப்பாளர் சபையின் ஒப்புதல் கிடைத்துள்ளது. மேற்குறித்த கருமத்துக்காக, மேலே சொல்லப்பட்ட காணித் துண்டை ஒதுக்கீடு செய்து வழங்குதல் தொடர்பில் குறித்த காணியின் தங்க பங்குதாரரான திறைசேரி செயலாளரின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அதற்கமைய, கொட்டகல பெருந்தோட்ட கம்பனியின் கீழுள்ள ஹொரண பெருந்தோட்டத்துக்கு உரிய காணியில் 2.5 ஏக்கர் காணித்துண்டை ஸ்ரீபாலி வளாகத்துக்கு உரித்தளிப்பதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சர் என்ற வகையில் கௌரவ பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X