Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Editorial / 2024 மார்ச் 16 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
ஹட்டன்- நல்லத்தண்ணி வழியாக சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய சென்று கொண்டிருந்த வேளையில் ரது பலம் பகுதியில் திடீர் சுகவீனம் அடைந்தவர் மரணமடைந்துள்ளார்.
கொழும்பு 06, வெள்ளவத்தை, பெரகும்பா வீதியில் வசிக்கும் 73 வயதுடைய நாராயணன் சாபு என்பவரே மரணமடைந்துள்ளார்.
திடீர் சுகயீனமடைந்த அவரை அவரது உறவினர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தனர் எனினும், 15.03.2024 அன்று இரவு 12.35 மணிக்கு அவர் உயிரிழந்ததாக மஸ்கெலியா வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
அவரது உடலம் உடற் கூற்று பரிசோதனைக்காக டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு வைத்தியசாலையில் உடற் கூற்று பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
சிவனொளிபாதமலை பருவக்காலம் இவ்வருடம் ஆரம்பமானது முதல் இதுவரை சிவனொளி பாதமலைக்கு தரிசனம் செய்யவந்தவர்களில் அறுவர் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago