2025 ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமை

வெளிநாட்டு பிரஜையின் அலைபேசியை பறித்த இருவர் கைது

Editorial   / 2024 டிசெம்பர் 06 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

  ​செ.தி.பெருமாள்

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி புதன்கிழமை (04) பயணித்த உடரட்ட மெனிகே ரயிலில் பயணித்த ஸ்பெயின் யுவதியொருவரின் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான iphone-ஐ இளைஞர்கள் இருவர் பறித்துள்ளனர்.

 சிறிய தடியொன்றால் அடித்துவிட்டு கையடக்கத் தொலைபேசியை பறித்ததாக குறித்த யுவதி எல்ல சுற்றுலா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

 ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் ரொசெல்ல பிரதேசத்தில் இரு இளைஞர்களை சோதனையிட்ட போது குறித்த கையடக்கத் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வட்டவளை ரொசெல்ல மற்றும் விக்டன் தோட்டங்களை சேர்ந்த 23 மற்றும் 26 வயதுடைய இரு சந்தேக நபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தபட்டதையடுத்து எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யுவதியை வட்டவளை பொலிஸ் நிலையத்திற்கு வியாழக்கிழமை (05) வரவழைத்த பொலிஸார் குறித்த கையடக்கத் தொலைபேசியை அவரிடம் ஒப்படைத்துள்ளனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X