2025 மார்ச் 31, திங்கட்கிழமை

வீதியை விட்டு விலகிய கார்

Janu   / 2025 மார்ச் 20 , மு.ப. 11:55 - 0     - 29

நுவரெலியாவில் இருந்து கொட்டகலை நோக்கி அதி வேகமாக பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் திம்புள்ள பத்தனை சந்திக்கு அருகில் புதன்கிழமை (19) மாலை  இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது சாரதி மாத்திரம் காரில் பயணித்துள்ளதாகவும் அவருக்கு காயம் ஏற்படவில்லை எனவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

அதிக வேகத்தில் காரை  செலுத்திய நிலையில் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்துக்கான காரணம் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்தில், காருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஞ்சித் ராஜபக்ஷ


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X