2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் பெண் பொலிஸ் உயிரிழப்பு

Janu   / 2023 ஒக்டோபர் 11 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்புள்ளை பிதேசத்தில் மோட்டார் சைக்கிளுடன்  டிப்பர் வாகனமொன்று மோதி செவ்வாய்க்கிழமை (10)  இடம்பெற்ற விபத்தில் பருத்துத்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பெண் பொலிஸ் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் தம்புள்ளையைச் சேர்ந்த சாந்திமா ரணசிங்க (வயது- 24) என்பவர் என தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட பெண் கலேவல தலகிரியாகம பகுதியில் மோட்டார்சைக்கிளிள்  சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதியே விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது.

இதில் படுகாயமடைந்த பெண் பொலிஸாரை  தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (10) மாலை உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நிதர்ஷன் வினோத்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .