2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

விபத்தில் இளைஞர் பலி

R.Tharaniya   / 2025 மார்ச் 19 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பளை - கண்டி வீதியில்  கல்கெடியாவ  பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கம்பளை, கண்டி  வீதியை  சேர்ந்த அஹமட்  ரிஸ்வி மொஹமட்  ரிஹாம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கண்டியிலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த அவர், கம்பளையிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கண்டியின் அக்குரணைப் பகுதியில் பணிபுரியும் இந்த இளைஞன், செவ்வாய்க்கிழமை (18) மாலை தனது பணியிடத்திலிருந்து நோன்பு முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் கார் தவறான பாதையில் வந்ததே இவ் விபத்து நேர்ந்தற்கான காரணம் என்பது தெரியவந்துள்ளது,

கார் ஓட்டுநரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.மேலும் கம்பளை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி நந்தன குமாரவின் அறிவுறுத்தலின் பேரில்,  விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

நவி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X