2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

விஞ்ஞான ஆய்வுகூடத்தில் மின்கசிவால் தீ

Editorial   / 2024 நவம்பர் 19 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஜலீல்

உக்குவளை அஜ்மீர் தேசிய பாடசாலையின் இரண்டு மாடி விஞ்ஞான ஆய்வுகூட கட்டிடம் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

தீப்பற்றியது தொடர்பில் உடனடியாக  அறிந்த இப்பாடசாலை அதிபர் சரூக் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க மற்றும் பழைய மாணவர் சங்க குழுவினர் பாடசாலை நலன்விரும்பிகள் எனப்பலரும் இப்பாடசாலைக்கு வருகை தந்து அக்கணமே மாத்தளை தீயணைக்கும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு தீ பரவாதிருக்க தீயை அணைக்க பகீரத பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டது.

 வெள்ளிக்கிழமையன்று (15) இரவு 7.00 மணியளவில் பற்றிய தீ    இரவு 11.00 மணி வரையிலும்   பரவிய நிலையில் காணப்பட்டது. இக்கட்டிடத்தில் இருந்த மாணவர்களுக்கான விஞ்ஞான பாட  கணனிகள் உட்பட இரசாயன பொருட்கள் என்பன தீயிக்கிரையானதாகவும் இக்கட்டிட மேல்மாடியுடன் அதன் கூரையும் முற்றாக தீயிக்கிரையானதால் சுமார் இரண்டு கோடிக்கும் அதிக  நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது 

இக்கட்டிடத்தின் மின்னொளி வழங்கும் இணைப்புக்கம்பியில் ஏற்பட்ட மின்கசிவே இத்தீ ஏற்படக் காரணம் எனவும் இதுகுறித்து மாத்தளை குற்றத் தடுப்புச பொலிஸ் அதிகாரிகள் மின்சார சபை அதிகாரிகள் இது குறித்து மேலும் விசாரணைகளை நடாத்தினர் இத்தீவிபத்தால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தில் உக்குவளை அஜ்மீர் தேசிய பாடசாலைக்கு  "மகிந்தோதய" இரண்டு மாடி வசதியுள்ள  கட்டிடங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தன 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X