2025 மார்ச் 31, திங்கட்கிழமை

வாகன விபத்து ; ​ஐவர் காயம்

Janu   / 2025 மார்ச் 24 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை-பண்டாரவளை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்தொன்று, தோவ ரஜ மகா விஹாரைக்கு அருகில் வைத்து   முச்சக்கர வண்டி மற்றும் வேன் மீது மோதி ஞாயிற்றுக்கிழமை (23) மாலை ஏற்பட்ட விபத்தில், காயமடைந்த ஐந்து பேர் பதுளை போதனா வைத்தியசாலையிலும், பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கிய முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலைக்கும், பேருந்தில் பயணித்த மற்றொருவர் காயமடைந்து பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலைக்கும் அனுப்பப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 பண்டாரவளையில் இருந்து வெல்லவாய நோக்கி பயணித்த பேருந்து,   வேன் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி, வீதியை விட்டு விலகி மண் மேட்டில் சாய்ந்துள்ளது.  பேருந்தின் பிரேக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார்  சந்தேகிக்கின்றதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

பாலித்த ஆரியவங்ச


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X