2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வலப்பனை - கண்டி வீதியில் பாரிய மண்சரிவு

Freelancer   / 2023 டிசெம்பர் 29 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்.

சீரற்ற வானிலை காரணமாக  இடைவிடாது பெய்து வரும் மழையினால் நுவரெலியா மாவட்டம் வலப்பனை பொலிஸ் பகுதிகளில் ஆங்காங்கே மண்மேடுகள் சரிவு ஏற்பட்டுள்ளதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.

அதேநேரத்தில் வலப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலப்பனை-கண்டி பிரதான வீதியின் கும்பால்கம வெவகலை பகுதியில் பாரிய மண்மேடு இன்று பிற்பகல் 12.45 மணியலவில் சரிந்துள்ளது.

இதன் காரணமாக வலப்பனை தொடக்கம் கண்டி பிரதான வீதி ஊடாக பதியபெலல, ரிகலகஸ்கடை,ஹங்குராங்கெத்த வழியாக கண்டிக்கு செல்லும் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் கும்பால்கம வெவகலை பகுதியில் இவ்வாறு சரிந்துள்ள பாரிய மண்மேடு பிரதான வீதியை முற்றாக மூடியுள்ள நிலையில் அங்கு மண் அகற்றும் பணிகள் ஆரம்பித்துள்ளதாகவும், வீதியை சீர் செய்யும் வரை வலப்பனையிலிருந்து கண்டி பகுதியை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் வலப்பனையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .