2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

வட்டவளை விபத்தில் இருவருக்கு காயம்

Editorial   / 2024 நவம்பர் 25 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை, கரோலினா தோட்ட பகுதியில் இன்று காலை 6.40 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இதன்போது, அதிவேகமாக பயணித்த தனியார் பஸ் ஒன்று, எதிர்திசையில் வந்த இ.போ.ச பஸ்ஸுடன் மோதியதில் தனியார் பஸ்ஸின் பின் பகுதி இரண்டாக உடைந்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் இ.போ.ச டிப்போவிற்கு சொந்தமான, கினிகத்தேனையிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற பஸ்ஸும், ஹட்டனிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸூம்  மோதி  இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும், நிலவும் மோசமான வானிலையுடன் ஹட்டன் கொழும்பு பிரதான வீதி மற்றும் ஏனைய சில வீதிகள் வழுக்கும் தன்மையுடன் இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் தனியார் பஸ்ஸுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .