2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

லொறி புரண்டதில் 22ற்கு மேற்பட்டோர் காயம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 04 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் பகுதியில் லொறி ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளான சம்பவம்  செவ்வாய்க்கிழமை  (03) இரவு 9.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள பிரவுன்ஸ்விக் தோட்ட புளும்பீல்ட் பகுதியில் இருந்து காசல்றி பகுதிக்கு மரண வீடொன்றுக்கு சென்று திரும்பும் வழியிலேயே இவ்விபத்து இடம்பெற்று இருப்பதாக மஸ்கெலியா போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.

விபத்தில் சாரதி உட்பட 22 பேர் காயமடைந்துள்தோடு சாரதி மற்றும் பாதிக்கப்பட்ட மேலும் 17 பேர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இவர்களில் மூவர் கடுங்காயங்களுக்கு உள்ளான நிலையில்   நாவலப்பிட்டி ஆதார வைத்திய சாலைக்கும் கண்டி போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சிறு காயங்களுடன் ஒரு ஆண் நான்கு பெண்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .