Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 12, சனிக்கிழமை
Editorial / 2024 நவம்பர் 28 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐந்து வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கான ஊசி வியாழக்கிழமை (28) போடப்படுவதாக கூறி டயகம தொடக்கம் பசுமலை வரையான லிந்துலை MOH பிரிவுக்கு கீழ் உள்ள அனைத்து குடும்ப நல உத்தியோகத்தர்கள் மூலம் தகவல் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து குழந்தைகள்? அக்கரப்பத்தனை பொது வைத்தியசாலைக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையின் போதும் கூட அவர்களுக்கு முறையாக அமர்வதற்கான கதிரை வசதிகள் ஒழுங்குசெய்யப்படாமல் வைத்தியசாலைக்கு வெளியிலும் உள்ளும் கால் கடுக்க நின்று கொண்டிருந்துள்ளனர்.
மிகவும் நெரிசலான சூழலில் தமது குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள காத்திருந்துள்ளனர். பெற்றோர்களின் சிரமங்களை கவனத்தில் கொள்ளாமல் வைத்தியர்கள் தங்களுக்கு இலகுவான வகையில் சேவைகளை செய்து கொள்ள எத்தனித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதுமட்டுமல்லாது முதலில் வருகை தந்த மூன்று வயதுக்கு குறைந்த 30 சிறார்களுக்கு மட்டும் ஊசிகளை வழங்கிவிட்டு ஊசி போதாது, 30 பேருக்கு மேல் வழங்கமுடியாதுள்ளது என காரணங்கள் சொல்லி அடுத்த வாரங்களில் டயகம வைத்தியசாலையில் வந்து தடுப்பூசியை பெற்றுக் கொள்ளும்படி பல குழந்தைகளின் பெற்றோர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
சீரற்ற வானிலையின் போதும் கூட தூரப்பிரதேசங்களில் இருந்து சிரமப்பட்டு வருகை தந்த பலரும் திருப்பி அனுப்பப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை எதிர்வரும் காலங்களில் எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்தும் பல சந்தர்ப்பங்களில் இந்த பெற்றோர்கள் அலைகழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
11 Apr 2025