Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 18 , பி.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆ.ரமேஸ்
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லபுக்கலை தேயிலை தொழிற்சாலைக்கு அருகில், இன்று (18) மாலை 05 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில், சாரதி உட்பட முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
கொழும்பிலிருந்து நானுஓயா - எடிம்பரோ தோட்டத்தை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று, கண்டி -நுவரெலியா வீதியின் லபுக்கலை தோட்ட தொழிற்சாலைக்கு அருகில், பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாக்கியது.
இந்த விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த சாரதி உட்பட மூவரையும், அப்பகுதி பொதுமக்கள் காப்பாற்றி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில், விபத்து தொடர்பான விசாரணையை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட கோளாரு காரணமாக விபத்து சம்பவித்ததாக சம்பவத்தில் காயமடைந்த சாரதி தெரிவித்தார்.AN
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .