Editorial / 2024 ஜூலை 12 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தரும் முகவர் நிலையம் ஒன்றுக்கு செலுத்த வேண்டிய பத்து இலட்சம் ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரி ஒருவரை இம்மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் வியாழக்கிழமை(11) உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவை நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரபுதிகா நாணயக்கார பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
நுவரெலியா விஷேட பொலிஸ் பிரிவில் கடமையாற்றி வரும் பொலிஸ் அதிகாரி ஒருவரின் உறவினர், வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு செல்வதற்காக வெளிநாட்டு முகவர் நிலையம் ஒன்றுக்கு பத்து லட்சம் ரூபாய் பணம் செலுத்த வேண்டியிருந்தது.
இந்த பணத்தை தனது உறவினரான பொலிஸ் அதிகாரிக்கு அனுப்பிவைத்து வேலைவாய்ப்பு முகவர் நிலையத்திற்கு செலுத்துமாறு கூறியுள்ளார்.
ஆனால் நீண்ட நாட்களாக இந்த பணத்தை குறித்த பொலிஸ் அதிகாரி செலுத்தாத நிலையில் தான் வெளிநாட்டு வேலைக்கு செல்ல முடியாத விரக்தியில் பொலிஸ் அதிகாரியின் உறவினர் பொலிஸ் முறைப்பாடு செய்திருந்தார்.
அதனடிப்படையில், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கு விசாரணைக்காக பொலிஸ் அதிகாரி நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். வழக்கு விசாரணையின், அந்த பொலிஸ் அதிகாரி பணத்தை மோசடி செய்திருந்தமை கண்டறியப்பட்டது.
உறவினர் வழங்கிய பணத்தை மோசடி செய்துள்ளதாக சந்தேகத்தின் பேரில் பொலிஸ் அதிகாரியை இம்மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
25 minute ago
37 minute ago
42 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
37 minute ago
42 minute ago
50 minute ago