2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

ரயில் பயணிகளின் கவனத்துக்கு

Editorial   / 2024 டிசெம்பர் 27 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை- கோட்டைக்கும், கோட்டை- பதுளைக்கும்   இடையில் இன்று வௌ்ளிக்கிழமை (27), நாளை சனிக்கிழமை  (28) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (29) ஆகிய தினங்களில் விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து இன்று வௌ்ளிக்கிழமை (27) இரவு 7.30 மற்றும் நாளை  சனிக்கிழமை (28) காலை 7.45 மணிக்கும், பதுளை புகையிரத நிலையத்தில் இருந்து சனிக்கிழமை  (28) காலை 7.05 மணிக்கும், கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து இரவு 7.30 மணிக்கும் விசேட புகையிரதம் புறப்பட உள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அலுவலகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X