2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

ரயில் டிக்கெட் மோசடி: ஒருவர் கைது

Editorial   / 2025 மார்ச் 31 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலிருந்து பதுளைக்கு ஓடும் உடரட்ட மெனிகே ரயிலுக்கான டிக்கெட்டுகளை ஒன்லைனில் பெற்று, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு  அதிக விலைக்கு விற்பனை செய்து சில காலமாக மோசடியில் ஈடுபட்டு வந்த ஒருவர், ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கண்டி சுற்றுலா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

விசாரணைகளில், அந்த நபர் அந்த இடத்திற்கான டிக்கெட்டை 1,200 ரூபாய்க்கு கொள்வனவு செய்து,  வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ. 13,000. க்கு விற்பனை செய்து வந்துள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இந்த நபர் தனது தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி 5 மாத காலப்பகுதியில் 92 முறை ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளதாகவும், பிற நபர்களின் தேசிய அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி ரயில் டிக்கெட்டுகளையும் வாங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X