2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ரயிலில் மோதி ரயில் கடவை மேற்பார்வையாளர் பலி

Freelancer   / 2025 ஏப்ரல் 19 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.திவாகரன்

 

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற ரயில் மோதியதில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

இந்த விபத்து, இன்று சனிக்கிழமை (19) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக, பட்டிபொல பொலிஸார் தெரிவித்தனர்.

 

தியத்தலாவ பகுதியைச் சோர்ந்த 26 வயதுடைய சம்பத் சல்காடு என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற ரயிலில் பெரகும்புர - அம்பெவெல ரயில் நிலையங்களுக்கு இடையில், அதிகாலை 4:15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

 

உயிரிழந்தவர் ரயில் நிலையத்தில் ரயில் கடவை மேற்பார்வையாளராக பணி புரிந்து வருவதாகவும் ரயில் செல்லும் போது அவர் தண்டவாளத்தில் படுத்து உறங்கியதாகவும், விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

உயிரிழந்தவரின் சடலம் அதே ரயிலில் ஏற்றி அம்பெவெல ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பட்டிபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.AN


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .