Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
Janu / 2023 ஒக்டோபர் 02 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவி
கம்பளை பிரதேசத்தில் வைத்தியசாலைக்கு அருகில் திடீரென ஏற்ப்பட்ட தீ விபத்தால் முச்சக்கர வண்டியொன்று முற்றாக எரிந்துள்ளது.
குறிப்பிட்ட முச்சக்கரவண்டியில் கணவன், மனைவி மற்றும் பிள்ளைகள் அருகாமையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொண்டு சுமார் 50 மீற்றர் தூரம் முன்னோக்கிச் சென்று கொண்டிருந்த போதே குறிப்பிட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன் அப்பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தீயை அணைக்க முயற்சித்த போதும் முச்சக்கரவண்டி முற்றாக எரிந்துள்ளதாக தெரியவருகிறது.
கம்பளை மாநகரசபைக்குள் தீயணைக்கும் பிரிவு இல்லாதமையால் தீ விபத்துக்களில் பெரும் அழிவு ஏற்படுத்துவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களில் மட்டும் இந்த வீதியில் சுமார் 5 முச்சக்கர வண்டிகள் தீக்கிரையாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago