Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2024 மே 02 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பள உயர்வு குறித்து முதலாளிமார் சம்மேளனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி இலக்கம் 2382/04, தேயிலை உற்பத்தி மற்றும் உற்பத்தி வர்த்தகம், இறப்பர் மற்றும் கச்சா இறப்பர் உற்பத்தி வர்த்தகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது.
அதற்காக ஊடகங்கள் மூலம் பரவலான செய்திகள் வெளியாகியிருந்தன. மேலும், மே 1ஆம் திகதி உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொட்டகலையில் நடைபெற்ற கூட்டத்திலும், பெருந்தோட்டக் கம்பனிகளின் தொழிலாளர்களையும் பிரதிநிதித்துவப்படுத்திய கூட்டத்தில் ஜனாதிபதி இதனையே மீண்டும் வலியுறுத்தினார்.
நாளாந்த சம்பள அதிகரிப்பு தொடர்பில் இறுதித்தீர்மானம் எடுக்கப்படாத நிலையில், ஜனாதிபதியின் கூற்று தோட்டத்தொழிலாளர்களாலும் பொதுமக்களாலும் தவறாகப்புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனமும் அதன் உறுப்பினர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.
ஏப்ரல் 30, 2024 அன்றுவெளியிடப்பட்ட வர்த்தமானிஅறிவிப்பின்படி, தொழிலாளர் ஆணையாளர் நாயகம் தேயிலைசெய்கை மற்றும் உற்பத்தித்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை நிர்ணயிக்கவிரும்புகிறார். இந்தமுடிவுதொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய மே 15, 2024 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கவும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கவும் இந்தஅறிவிப்புகள் மூலம்பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் உட்பட அனைத்துபங்கு தாரர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத்தொழிலாளர்களின் அதிகரிக்கப்பட்ட நாளாந்த சம்பளம் 2024மே 01 ஆம்திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் உத்தேச புதியசம்பள அதிகரிப்புக்கான திகதி அல்லது அதிகரிக்கப்பட்ட சம்பளத்தொகை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில்உண்மையில்லை என சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் ஆணையாளரால் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் இந்தமுன்மொழிவுகளுக்கு ஆட்சேபனைகளைத் தாக்கல்செய்யும் என்பதை இலங்கைபெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் உறுதிப்படுத்தமுடியும்.
இந்தஅறிவிப்பு தொடர்பாக, அரசு அதிகாரிகளின்அறிக்கைகளும், ஊடகங்கள் வெளியிட்டவிதமும், சம்பள அதிகரிப்பு குறித்து, தொழிலாளர்கள் மத்தியில் தேவையற்ற அவநம்பிக்கையை ஏற்படுத்தும் என சம்மேளனம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago
3 hours ago