2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மூன்று வீடுகள் தீயினால் எரிந்து நாசம்

Freelancer   / 2024 ஜனவரி 04 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிந்துலை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட பெரிய ராணிவத்தை தோட்டத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட தீயினால் 3 வீடுகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன.

9 ஆம் இலக்கம் கொண்ட 10 வீடுகள் உள்ள தொடர் குடியிருப்பில் திடீரென தீப்பறவியுள்ளது. 

இதன் போது வீட்டில் இருந்த பெருமதி மிக்க பொருட்கள் பாடசாலை மாணவர்களின் உபகரணங்கள் சிவில் ஆவணங்கள் என முக்கியமான பொருட்கள் தீயில் கருகி உள்ளன.

வீட்டில்  இருந்த 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.பொதுமக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.  தீ பரவியதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பான விசாரணை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

துவாரக்ஷான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .