2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

“முஸ்லிம்களின் தேவைகளை நிறைவேற்றவும்”

Editorial   / 2025 மார்ச் 10 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஜலீல்

பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களின் தேவைகளை இனங்கண்டு அவற்றை நிறைவேற்றி கொடுக்க  வேண்டும் என மத்திய மாகாண சபையின் முன்னாள் ஸ்ரீ.ல.மு.கா.உறுப்பினரும்  அஸ்ரப் பவுண்டேஷன் அமைப்பாளருமான அல்ஹாஜ் ஐ. எம். அத்ஹம்  கோரியுள்ளார்.

இதுகுறித்து தேசிய நல்லிணக்கத்திற்கான பிரதி அமைச்சர் அல்ஹாஜ் முனீர் முளப்பருக்கு எழுதி அனுப்பிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது

கடந்த பொதுத் தேர்தலின் போது  தேசிய மக்கள் சக்தியை வெற்றி பெறச் செய்வதில் பல பிரதேசங்களிலும் முஸ்லிம்கள் பங்களிப்புகளை வழங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக இவ் வெற்றிக்காக முஸ்லிம்கள் நோன்பு நோற்றியதாகவும் அறியமுடிந்தது.

 இந்நிலையில் தாங்கள் இந்த அரசின் தேசிய நல்லிணக்கத்திற்கான பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து நானும் ஒரு அரசியல்வாதியாக செயற்பட்டவர் என்ற வகையில்  மகிழ்கிறேன்.  

இந்நிலையில் சமீபத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவு திட்டத்தின் நிதி மூலம் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களின் தேவைகளை இனம்கண்டு நிறைவைற்றிக்கொடுக்க தேசிய நல்லிணக்க பிரதியமைச்சராகிய  நீங்கள் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வருவதுடன் தாங்களும் இது விடயத்தில் கரிசனை கொள்ளுமாறு வேண்டி கொள்வதுடன் இதற்காக பிரதேசங்களின் அமைப்பாளர்கள்(இக்கட்சி) மற்றும் ஏனைய முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடி அவர்களது ஒத்துழைப்புகளை பெறலாம் என்றும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X