Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2024 டிசெம்பர் 01 , பி.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.திவாகரன், டி.சந்ரு
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதமுல்ல தோட்டத்தில் சனிக்கிழமை(30) இரவு மின்சாரம் தாக்கி அதே தோட்டத்தைச் சேர்ந்த தங்கவேல் கிருஷ்ணராஜ் (வயது 67) மரணமடைந்துள்ளார்.
காட்டு விலங்குகளிடமிருந்து மரக்கறி தோட்டத்தை பாதுகாப்பதற்காக பாதுகாப்பு வேலியில் இணைக்கப்பட்ட மின்சார இணைப்பில் இருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் அதேதோட்டத்தில் குரங்கு விரட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் எனவும் வழக்கம் போல் விவசாய காணிக்கு தொழிலுக்கு செல்லும்போது வழுக்கி மின்சார வேலியில் விழுந்து உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர் .
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த நாவலப்பிட்டி
நீதவான் நீதிமன்ற நீதவான், சடலத்தை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸாருடன் நுவரெலியா தடயவியல் பொலிஸார் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
8 hours ago