Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Janu / 2024 ஏப்ரல் 08 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட ஹட்டன், டிக்கோயா, ஹொன்சி கல்லூரியில் ஊடக கற்கை மாணவர்களுக்கான ஊடகசெயலமர்வு சனிக்கிழமை (06) கல்லூரியில் இடம்பெற்றுள்ளது .
நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் ட்கலஸ் நாணயக்காரவின் ஆலோசனைக்கமை ,கல்லூரியின் அதிபர் வி.உதயகுமார் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது .
சுமார் 34 மாணவர்கள் கலந்துகொண்ட இச் செயலமர்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான ரஞ்சித் ராஜபக்ஸ, ஜீவசாதாசிவம், தியாகு சுப்ரமணியம் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கான பயிற்சிகளை வழங்கியுள்ளனர்.
இந்த செயலமர்வில் கல்லூரியின் ஊடகப் பாட ஆசிரியர் ஏ.வியானி, ஜோய் ஒன்றியத்தின் சார்பில் செயலாளர் காமினி பண்டார லங்கா திலக, பொருளாளர் ராமச்சந்திரன் (ஊடகவியலாளர் ) ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
மேலும் இதன்போது , செய்தி அறிக்கையிட புகைப்படங்களை எவ்வாறு எடுப்பது மற்றும் இந்த நவீன புகைப்பட கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊடகவிலுக்கு பயன்டுத்தப்படும் நவீன உபரணங்கள் பற்றியும் கற்பிக்கப்பட்டுள்ளது.பயிற்சியின் றிறைவில், மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் ஒன்றியத்தின் சார்பில் கல்லூரியின் வாசிகசாலைக்கு நூற்தொகுதியொன்றும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago