2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மாடு அறுக்கும் தொழுவம் குறித்து முறைப்பாடு

Janu   / 2023 டிசெம்பர் 26 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நானுஓயா பிரதான நகரில் அமைந்துள்ள மாடு அறுக்கும் தொழுவத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அக்கிராம மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

நானுஓயாவில் முறைசாரா மற்றும் சட்டவிரோத பசுக்கொலை மற்றும் மாட்டிறைச்சி வியாபாரம் நடைபெறுவதாக உரிய ஆதாரங்களுடன் கூடிய புகைப்படங்கள் நானுஓயா பிரதேசவாசிகள் குழுவொன்றும் இதில் அதிகம்  பாதிக்கப்பட்ட தரப்பினர்கள் இணைந்து  எழுத்து மூலம் அடங்கிய கையொப்பங்கள் மற்றும் உரிய தீர்வை வழங்குமாறு கோரி ஜனாதிபதி சுகாதார அதிகாரிகள், பௌத்த விவகார அமைச்சர்,  நீதி அமைச்சர், மத்திய மாகாண ஆளுநர் மற்றும் தலைமை மாநகர சுகாதார பரிசோதகர் உட்பட 19  இடங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், அடிக்கடி இப்பகுதியில் சட்டவிரோத மாடு வெட்டும் செயற்பாடுகள் இடம்பெற்றுவரும் நிலையில், உரிய அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .