2025 பெப்ரவரி 05, புதன்கிழமை

மவுஸாகலை தோட்டத்தில் 8 வீடுகள் தீக்கிரை

Freelancer   / 2025 ஜனவரி 18 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்


மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுஸாக்கலை தோட்டத்தில் உள்ள 08 தோட்ட வீடுகளில், நேற்று இரவு 11.30 மணியளவில், தீ பரவியுள்ளதாக, மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

தோட்டத் தொழிலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மவுஸ்ஸாக்கலை இராணுவ முகாமின் படையினர் இணைந்து டுகளுக்குள் பரவிய தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீயினால் நாசமான வீடுகளில் வசிப்பவர்களின் சொந்த உடமைகள் முற்றாக எரிந்து நாசமாகின. 

தீயினால் ஏற்பட்ட இழப்பு மற்றும் தீ விபத்துக்கான காரணம் மின் கசிவா என்பது இன்னும் மதிப்பிடப்படவில்லை.AN


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X