Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2024 பெப்ரவரி 11 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவி
கம்பளை முன்பள்ளியில் மரம் விழுந்து படுகாயமடைந்த நிலையில், கண்டி தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஐந்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த, சிறுவன் மரணமடைந்தார். அவரது ஜனாஸா, கம்பளை கஹடபிட்டியவில், சனிக்கிழமை (10) இரவு இடம்பெற்றது.
மரம் விழுந்த சம்பவத்தில், அதே பாடசாலையில் கல்விக்கற்ற சிறுவன், சம்பவ தினத்தன்று ஸ்தலத்திலேயே மரணமடைந்தார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த இரண்டாவது மாணவனான சிறுவன், கம்பளை, கஹடபிட்டிய, பேபில பிரதேசத்தில் வசிக்கும் மொஹமட் இக்ரம் ஹையானின் (வயது 5) சிறுவனின் ஜனாஸாவே நல்லடக்கம் செய்யப்பட்டது. இரண்டு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இந்த சிறுவன் இளையவர்.
கம்பளை பென்ஹில் சர்வதேச பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள், வெளியில் விளையாடிக் கொண்டிருந்த போது அருகில் இருந்த பெரிய மரமொன்று விளையாட்டு மைதானத்தில் விழுந்து மூன்று சிறுவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
மற்றுமொரு சிறுவன், தொடர்ந்து சிகிச்சைப்பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
32 minute ago
52 minute ago
59 minute ago