2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மரம் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து தடை

Janu   / 2024 மே 23 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன்-கண்டி பிரதான வீதியின் வட்டவளை நகரை அண்மித்த பகுதியில் வியாழக்கிழமை (23) அன்று பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததால் குறித்த வீதியூடான போக்குவரத்திற்கு தடையேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக  ஹட்டனில் இருந்து கினிகத்தேனை வழியூடாக கண்டி,கொழும்பிற்கு செல்லும் வாகனங்களுக்கும்  ,  கொழும்பு, கண்டி பகுதிகளில் இருந்து ஹட்டன் பிரதேசத்திற்கு பயணிக்கும் வாகனங்களுக்கும் பெரும் அசௌகரியத்திற்கு  முகம் கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது .

இந் நிலையில் , வட்டவளை பொலிஸார் பொது மக்களின் உதவிகளுடன் மரத்தின் பாரிய கிளைகளை அகற்றி போக்குவரத்து சீர் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

ஆ.ரமேஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X