Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Editorial / 2024 செப்டெம்பர் 02 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஊவா மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன அல்விஸ் மரண தண்டனை விதித்தார்.
பதுளை கெந்தகொல்ல கிராமத்தில் 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் திகதி திசாநாயக்க முதியன்செலாகே சந்திரமாவதி (35) என்பவரை படுகொலை செய்தமைக்காக அவரது கணவர் சுலைமான் தர்மதாசவிற்கு எதிராக பதுளை பொலிஸார் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.
விசாரணையில் சந்தேகநபருக்கும் இறந்தவருக்கும் இடையே சில காலமாக குடும்பத் தகராறு இருந்து வந்ததாகவும், இறந்தவருக்கு திருமணத்திற்குப் புறம்பான தொடர்பு இருப்பது உறுதியானதையடுத்து, இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சந்தேக நபர் மனைவியின் காலில் இரும்பு கம்பியால் அடித்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதல்களுக்கு இலக்கான அந்த பெண்ணை அயலவர்கள் இருவர் முச்சக்கரவண்டியில் அழைத்துச் சென்று கெந்தகொல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பதுளை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டமையும் சாட்சியங்களில் இருந்து தெரியவந்துள்ளது.பதுளை பொது வைத்தியசாலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
தடயவியல் நிபுணர் டாக்டர் என்.எம்.ரூல்ஹாக்கின் சாட்சியத்தின்படி, இறந்தவரின் ஒரு காலில் இரண்டு காயங்கள் இருந்ததாகவும், ஒரு காயத்தின் தசைகள் உயிரற்றதாகவும், உள் இரத்தப்போக்கு காரணமாக மரணம் ஏற்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
தீர்ப்பை அறிவித்த நீதிபதி, சந்தேகநபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்த வழக்கை அரசு வழக்கறிஞர் திருமதி ஹலிமா ஃபைஸ் நெறிப்படுத்தினார். ஆரியவன்சவை
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago