2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மண் திட்டுகள் சரியும் அபாயம்

Janu   / 2024 ஜனவரி 09 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மலைநாட்டில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும்  கனத்த மழையால் பெருந்தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் பண்ணையாளர்கள் அன்றாட பணிகளில் ஈடுபட முடியாதுள்ளதாகவும் தெரியவித்துள்ளனர்.  

கடும் மழையால் மவுஸ்சாக்கலை மற்றும் காசல்ரீ, மேல் கொத்மலை கென்யோன், லக்சபான, நவலக்சபான, பொல்பிட்டிய, கலுகல விமலசுரேந்திர ஆகிய நீர்த் தேக்கங்களுக்கு நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மத்திய மலைநாட்டில் உள்ள அனைத்து நீர் நிலைகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் நீராட செல்வோர் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் முடிந்த வரை நீர் நிலைகளில் நீராட வேண்டாம் எனவும்  நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட தெரிவித்துள்ளார்.

அத்துடன், மத்திய மலைநாட்டில் மழை காரணமாக மண் திட்டுகள் சரியும் அபாயம் உள்ளதால் பாரிய மண் திட்டுகள் உள்ள பகுதிகளில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் நுவரெலியா மாவட்ட பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கௌசல்யா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .