Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2024 மே 19 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினக் கற்கள் சேகரிப்பதற்காக கெசல்கமுவ ஓயாவின் கரையிலும், ஓயாவின் அடிவாரத்திலும் பொருத்தப்பட்டிருந்த மணல் அள்ளும் இயந்திரத்தை பொலிஸார் கைப்பற்றியதையடுத்து, இரத்தினக் கற்கள் அகழ்வில் ஈடுபட்டிருந்தோர் தப்பியோடியுள்ளனர்
பொகவந்தலாவ மஹாஎலிய காட்டில் இருந்து காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பிரதானமாக நீர் பாயும் கெசல்கமுவ ஓயாவில் சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கற்கள் எடுப்பதற்காக கெசல்கமுவ ஓயாவில் பொருத்தப்பட்டிருந்த சாண்டர் இயந்திரத்தை சனிக்கிழமை (18) இரவு பொகவந்தலாவை பொலிஸார் கைப்பற்றினர்.
கெசல்கமுவ ஓயாவில் சாண்டர் இயந்திரங்களை பாவித்து பாரிய சுற்றாடல் சேதம் விளைவிப்பதாக ஹட்டன் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலின் பேரில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு இயந்திரம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொகவந்தலாவை பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது, கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதுடன், இயந்திரத்தை இயக்குவதற்காக கொண்டுவரப்பட்ட ஜூஸர் இயந்திரம் மற்றும் 40 லீற்றர் டீசல் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சாண்டர் இயந்திரத்தின் பெறுமதி சுமார் 25 இலட்சம் ரூபாயாகும்.
சாண்டர் இயந்திரம் மின்சாரம் மற்றும் எரிபொருளைப் பயன்படுத்தி காற்றை ஊதி இயக்கும் இயந்திரம் என்றும், அந்த இயந்திரத்தில் பொருத்தப்பட்ட குழாயை ஓடையின் அடிப்பகுதிக்கும் ஓடையின் கரையோரங்களுக்கும் எடுத்துச் சென்று, மண் மற்றும் மணலை உறிஞ்சும் என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.
ரஞ்சித் ராஜபக்ஷ
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago