2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

“மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்”

Freelancer   / 2023 நவம்பர் 03 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி பெருமாள் 

நல்லத்தண்ணி நகருக்கு செல்லும் பிரதான வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் சுமார் மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் புதன்கிழமை (01) திகதி இடம்பெற்றுள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் மழை பெய்து வந்த வேலையில் இவ்வாறு திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் இருந்து தடயவியல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் மூன்று மணித்தியாலங்கள் கை ரேகை பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

இது குறித்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நல்லத்தண்ணி பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .